10000ஐ கடந்த கொரோனா பாதிப்பு…! சேதாரம் அதிகமான செங்கல்பட்டு

20 July 2020, 6:58 pm
corona Dead -Updatnews360
Quick Share

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 360 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.   சென்னை, அதனை ஒட்டிய மாவட்டங்களில் அதிக பாதிப்புகள் உள்ளன.  இதேபோன்று மதுரை, தேனி, நெல்லை மற்றும் தூத்துக்குடியிலும் அதிக பாதிப்புகள் காணப்படுகின்றன.

சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில் கொரோனா எண்ணிக்கை 5,029 ஆக உள்ளது.  இந் நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதியதாக 360 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

ஆகையால் மொத்த பாதிப்பு 10,008 ஆக உயர்ந்துள்ளது. இதேபோன்று  கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,114 ஆக இருக்கிறது.