3 தலைமுறைகளை கண்ட கிருஷ்ணம்மாள் பாட்டிக்கு 106வது பிறந்த நாள் ; கிடா வெட்டி விருந்தளித்து கொண்டாடிய பேரன், பேத்திகள்!!

Author: Babu Lakshmanan
4 September 2022, 8:44 pm
Quick Share

கோவை தடாகம் சாலை கணுவாய் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணம்மாள் (106 வயது). 1917ல் பிறந்த இவருக்கு இன்று 106வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

இந்த பிறந்தநாளை அவரது குடும்பத்தார் பேரன் பேத்திகள் இணைந்து விமர்சையாக கிடா வெட்டி அப்பகுதி மக்களுக்கு விருந்தளித்து கொண்டாடினர். மேலும், பாட்டிக்கு பொன்னாடை போற்றி கிரீடம் வைத்து அழகு படுத்தி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சுமார் 3 தலைமுறைகளை கண்ட இவரது காலில் விழுந்து வணங்கினர்.

Views: - 121

1

0