பெண்ணுடன் தகாத உறவு… காவல்துறையினர் மிரட்டியதாக ட்ராவல்ஸ் ஓனர் தூக்கு போட்டு தற்கொலை ; சிக்கிய பரபரப்பு கடிதம்..!!

Author: Babu Lakshmanan
4 September 2022, 8:32 pm
Chennai Suicide - Updatenews360
Quick Share

திருச்சியில் தகாத உறவில் தொடர்பு விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் மிரட்டியதாக ட்ராவல்ஸ் அதிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் ரோடு , சாலை ரோடு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் சரவண செல்வன் (41). இவரது மனைவி லாவண்யா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியில் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில், சரவண செல்வன் அலுவலகத்திற்கு அருகில் வசிக்கும் தனலட்சுமி என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இந்நிலையில் சரவணன்செல்வன் அந்த பெண்ணுக்கு பல லட்சம் பணம் செலவு செய்து வந்ததாக தெரிகிறது. திடீரென்று தனலட்சுமியுடன் தொடர்பை சரவண செல்வன் நிறுத்திக் கொண்டார்.
தனலட்சுமி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சரவணா செல்வன் மீது புகார் கொடுத்ததாக தெரிகிறது.

இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் சரவணா செல்வனை அழைத்து புகார் மனு குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், நேற்று வீட்டில் இருந்த சரவணா செல்வன் இரவு வீட்டின் அறையில் தூங்குவதாக மனைவியிடம் கூறிவிட்டு அறைக்கு சென்றவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

விடியற்காலை நீண்ட நேரம் ஆகியும் கணவர் காலையில் அறையில் இருந்து வெளியே வராத காரணத்தால் சந்தேகம் அடைந்த மனைவி அறைக்கு சென்று பார்த்த பொழுது சரவண செல்வன் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு மனைவி லாவண்யா அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து ஸ்ரீரங்கம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உறவினர்கள் சரவண செல்வன் அறையில் இருந்த ஒரு கடிதத்தை கைப்பற்றி உள்ளனர். அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கு காரணம் தனலட்சுமி மற்றும் அவர் குடும்பத்தினர் தான் மரணத்திற்கு முழு பொறுப்பு இவர்களுடன் காவல்துறையில் பணியாற்றும் IS திருமூர்த்தி, ரைட்டர் முத்துசாமி, ஸ்ரீ ட்ரெய்லர் கடையில் வேலை செய்யும் செல்வி மகன் லிஷாந்த், மகள் ஜோசிகா தனலட்சுமி என் தாயார் மல்லிகா ஆகியோரும் இவருக்கு உதவியாக இசை அறிவழகன் ஆகியோர் பொறுப்பு, என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கடிதத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த சரவண செல்வனின் உறவினர்கள் சம்பந்தப்பட்ட தனலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் போலீசார் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று கூறி, சரவணசெல்வனின் உடலை வாங்க மறுத்து ஸ்ரீரங்கம் காவல் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டடனர்.

இந்த சம்பவத்தால் ஸ்ரீரங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 599

0

0