கோவையில் நேரம் தவறி பட்டாசு வெடித்த 12 பேர் கைது…

15 November 2020, 12:24 pm
Quick Share

கோவை: கோவையில் நேரம் தவறி பட்டாசு வெடித்ததாக 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிப்பதற்கு நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 7 மணி வரையும் மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதை மீறி கோவையில் பல்வேறு இடங்களில் நேரம் தவறி பட்டாசு வெடித்ததாக கோபிகிருஷ்ணன் (24), ஸ்ரீராம் (24) அரவிந்த் (20) கணேசன் (21) வினோத்வயது (29) சிவகுமார் ( 28) மனோஜ் (26) ஜெகன்மோகன் (23) சேகர் (36) ஆஷிக் (20) கனகராஜ் ( 23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.. இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 285 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின்னர் 12 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Views: - 13

0

0