இதுக்கு ஒரு முடிவே இல்லையா? ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைது : இலங்கை கடற்படையினர் தொடர் அட்டூழியம்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 February 2022, 10:18 am
fisherman Arrest - Updatenews360
Quick Share

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்நிலையில்,எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடி துறை முகத்திலிருந்து அனுமதி சீட்டு பெற்று நேற்று 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.அப்போது தனுஷ்கோடி- தலைமன்னார் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் மீனவர்களின் 2 படகுகளும் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மீனவர்கள் 12 பேரையும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்த இலங்கை கடற்படை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேசமயம் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மேலும் சில மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு தொடர்ந்து இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் மீனவர்கள் மத்தியில் பரபரப்பையும்,அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக,கடந்த பிப்.8 ஆம் தேதி ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 963

0

0