13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை : FREE Fire மோகத்தால் ஏற்பட்ட விபரீதம்!!

23 February 2021, 2:12 pm
Minor Boy Hanging - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : விளாத்திகுளம் அருகே தாய் செல்போன் தர வில்லை என்பதால் 13 வயது சிறுவன் தூக்கிடடு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சீனிமுருகன், இவர் கூலி வேலை செய்து வருகிறார், இவருடைய மனைவி ஜோதிமணி. இவர்களுக்கு மதன் (வயது 16), பாலகுரு (வயது 13) இரு மகன்கள் உள்ளனர்.

தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் இருவரும் படித்து வந்துள்ளார். பாலகுரு 6ம் வகுப்பு படித்து வந்துள்ளார். வழக்கமாக மதன் மற்றும் பாலகுரு இருவரும் தங்களது பெற்றோர்களின் செல்போன்களை கொண்டு விளையாடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

மேலும் மதன் மற்றும் பாலகுரு இருவரும் செல்போனுக்கு சண்டையிடுவதும் வழக்கம் என்று தெரிகிறது. இன்று காலையில் 9ம் வகுப்பு படிக்கும் மதன் பள்ளிக்கு சென்று விட்டார். சீனிமுருகன் வேலைக்கு சென்று விட்டார்.

ஜோதிமணி விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெறும் உறவினர் வீட்டு திருமணத்திற்கு கிளம்பியுள்ளார். கொரோனா தொற்று காரணமாக பள்ளி விடுமுறை என்பதால் பாலகுரு வீட்டில் இருந்துள்ளார்.

தாய் கிளம்பியதும் தானும் திருமண நிகழ்ச்சிக்கு வருவதாக பாலகுரு கூறியுள்ளார். ஆனால் ஜோதி மணி வீட்டில் இருக்கும் படி கூறியுள்ளார். வீட்டில் இருக்க வேண்டும் என்றால் தாய் ஜோதி மணி செல்போனை தரும்படி கேட்டுள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த ஜோதிமணி, சாப்பிட்டு விட்டு வீட்டில் இருக்கும் படியும், வெளியில் சென்று விளையாடக்கூடாது என்று கூறி விட்டுச்சென்றுள்ளார். திருமண நிகழ்ச்சி முடிந்து ஜோதிமணி வீட்டிற்கு வந்து பார்த்த போது பாலகுரு தூக்கில் தொங்கிய படி உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

ஜோதிமணியின் அழுகுரலை கேட்ட அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து விளாத்திகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் விரைந்து வந்து சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியதில் தனது தாய் செல்போன் தரவில்லை, தன்னையும் அழைத்து போகவில்லை என்ற காரணத்தினால் பாலகுரு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. தாய் செல்போன் தரவில்லை என்பதற்காக சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 3

0

0