கள்ளக்காதலியின் 13 வயது மகளை கடத்தி திருமணம் : பாலியல் இச்சைக்கு பயன்படுத்திய கொடூரன் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
11 October 2021, 11:38 am
Harrassment - Updatenews360
Quick Share

கோவை : 13 வயது சிறுமியை கடத்தி வந்து திருமணம் செய்து பாலியல் தொல்லை அளித்த நபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வெற்றிவேல். கட்டிட தொழிலாளியான இவர் அதே மாவட்டத்தை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் ஒரே வீட்டில் 3 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார்கள்.

இந்த நிலையில் அந்த பெண்ணின் 13 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோவைக்கு கடத்தி வந்த வெற்றிவேல் திருமணம் செய்துகொண்டு அந்த சிறுமியை மிரட்டி தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு குடிபோதையில் வந்த வெற்றிவேல் சிறுமியை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் மனவேதனை அடைந்த சிறுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது.

இதையடுத்து அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். சம்பவம் தொடர்பாக காக்கா சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியிடம் விசாரித்தபோது அவருக்கு 13 வயது என்பது தெரியவந்தது.

மேலும் வேலூரில் இருந்து அவரது தாய்க்கு தெரியாமல் கடத்தி வந்து திருமணம் செய்து பாலியல் தொல்லை அளித்து வந்ததும் தெரியவந்தது. ஏற்கனவே சிறுமி மாயமானதாக வேலூரில் அவரது தாயார் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் சிறுமியை கோவைக்கு கடத்தி வந்து திருமணம் செய்ததோடு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்துவந்து கொலை மிரட்டல் விடுத்து வந்த வெற்றிவேலை போலீசார் குழந்தை திருமணம் கடத்தல் கொலை மிரட்டல் மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட வெற்றிவேலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Views: - 525

0

0