சிறுவனை லத்தியால் தாக்கிய காவலர் பணியிடமாற்றம் : அதிரடி உத்தரவு

24 August 2020, 9:48 am
Police Transfer - Updatenews360
Quick Share

கோவை : ஊரடங்கு விதிகளை மீறி வெளியே சுற்றிய 13 வயது சிறுவனை சராமாரி தாக்கிய காவலர் பணியிட மாற்றம செய்யப்பட்டுள்ளார்.

கோவை ஒண்டிப்புதூர் அடுத்த, சூர்யா நகர் பகுதியை சேர்ந்தவரக்ள் மணிகண்டன் பிரதிக்‌ஷா தம்பதியினர். இவர்களது 13 வயது மகன் யுவன் தனியார் பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறான். ஞாயிற்றுக்கிழமை தினமான நேற்று தளர்வுகள் அற்ற 24 மணி நேர முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள ஜெயேந்திர சரஸ்வதி சாலையில் ரோந்து பணியில் காவலர் ஒருவர் ஈடுபட்டிருந்துள்ளார்.

இந்த சூழ்நிலையில் நண்பர் வீட்டுக்கு சென்று விட்டு சக நண்பர்களுடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த சிறுவன் யுவனை காவலர் ஒருவர் நிறுத்தி விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது. விசாரித்தவர் பெற்றொரிடம் சொல்லி அறிவுரை கூறுவதற்கு பதில் லத்தியால் சரமாரியாக கை கால்களில் தாக்கியுள்ளார்,.

இதில் சிறுவனின் கை கால்களில் ரத்த காய தழும்புகள் ஏற்பட்டு வீங்கியுள்ளன. சிறுவன் என்று கூட பாராமல் அடித்த காவலர் யார் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறுவர்களை அடிப்பதை காவலர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று சிறுவன் யுவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காவலர் துர்காராஜ் என்பவரை சிங்காநல்லூர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிடமாற்றம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Views: - 35

0

0