கலெக்டர்கள் உட்பட பல ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! தமிழக அரசு அதிரடி உத்தரவு..!

12 November 2020, 9:35 pm
TN_Govt_Transfer_IAS_Officers_UpdateNews360
Quick Share

தமிழக அரசு இன்று 14 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது . இதில் திருவண்ணாமலை, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடிக்கு உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு கலெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

அரசு வெளியிட்டுள்ள பணியிட மாற்றங்களின் விபரம் பின்வருமாறு :

தமிழ்நாடு மீன்வளர்ச்சி கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குநர் மற்றும் மீன்வளத்துறை இயக்குநர் பொறுப்பில் இருந்த சமீரன், தென்காசி மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குநர் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பு வகித்த விஷ்ணு, திருநெல்வேலி மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை இணை ஆணையர் பொறுப்பு வகித்த மதுசூதனன் ரெட்டி, சிவகங்கை மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழர்கள் நல வாரியத்தின் இயக்குநர் பொறுப்பு வகித்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ராமநாதபுரம் மாவட்ட புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக இருந்த சந்தீப் நந்தூரி, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் இணை செயலாளராக இருந்த ஏ.ஆர்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய சுகாதார திட்டத்தின் திட்ட இயக்குநராக இருந்த செந்தில் ராஜ், தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெயகாந்தன், மீன்வளர்ச்சித்துறை இயக்குநர்பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த வீரராகவ ராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்ட கலெக்டராக இருந்த அருண் சுந்தர் தயாளன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் இணைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட கலெக்டராக இருந்த ஷில்பா பிரபாகர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் இணை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டராக இருந்த கந்தசாமி, இ-சேவைகளின் குறைதீர் அமைப்பின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெஸிந்தா லசாரஸ், அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழர்கள் நல வாரியத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திவ்யதர்ஷினி சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 28

0

0

1 thought on “கலெக்டர்கள் உட்பட பல ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! தமிழக அரசு அதிரடி உத்தரவு..!

Comments are closed.