9ம் வகுப்பு படிக்கும் சிறுமியை கர்ப்பமாக்கிய 14 வயது சிறுவன்… உறவினர் வீட்டுக்கு சென்ற போது அதிர்ச்சி..!!

Author: Babu Lakshmanan
26 July 2023, 8:08 pm

திருவாரூர் ; நன்னிலம் அருகே 14 வயது சிறுமியை 8 மாத கர்ப்பமாக்கிய 14 வயது சிறுவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே 9 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியில் உள்ள 9ஆம் வகுப்பு படிக்கும் 14 வயதுடைய சிறுவன் ஆசைவார்த்தைகளை கூறி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார்.

இதனால் அந்த சிறுமி 8 கர்ப்பமாகியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் புகாரை அடுத்து நன்னிலம் அனைத்து மகளிர் போலீசார் இன்று 14 வயது சிறுவனை அழைத்து விசாரணை செய்ததில், சிறுவன் தான் கர்ப்பத்திற்கு காரணம் என தெரியவந்தது.

இதை அடுத்து சிறுவனை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறார் சிறையில் அடைத்தனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!