14 வயது சிறுமிக்கு பல முறை பாலியல் தொல்லை : சிறுமியின் தாய் அளித்த புகாரால் 20 வயது இளைஞர் கைது!!

8 July 2021, 1:41 pm
Pocso Arrest - Updatenews360
Quick Share

வேலூர் : 14-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

கார்நாட மாநிலம் கே.ஜி.எப் பகுதியை சேர்ந்தவர் மாணவர் கிளைமன்ட் ஜேம்ஸ் (வயது 20). இவர் கடந்த மார்ச் மாதம் விடுமுறையில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது கடந்த சில நாட்களாக தனது உறவினர் வீட்டின் அருகே உள்ள 10-ம் வகுப்பு படிக்கும் 14-வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக சிறுமியின் தாய் காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காட்பாடி காவல் துறையினர் கிளைமண்ட் ஜேம்ஸை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 434

0

0