தமிழக மீனவர்கள் மேலும் 15 பேர் கைது : போராட்டத்துக்கு நடுவில் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!!
Author: Udayachandran RadhaKrishnan28 அக்டோபர் 2023, 8:18 மணி
தமிழக மீனவர்கள் மேலும் 15 பேர் கைது : போராட்டத்துக்கு நடுவில் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்!!
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 15 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். சிறைபிடித்த தமிழக மீனவர்கள் 15 பேரிடம் இலங்கை கடற்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கைதான 27 மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க ராமேசுவரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மேலும் 15 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0
0