16 வயது சிறுமியை கடத்தி பாலியல் அத்துமீறல் : 5 மாதத்திற்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்த உண்மை!!

Author: Udayachandran RadhaKrishnan
17 October 2021, 1:12 pm
Child Abuse - Updatenews360
Quick Share

திருப்பூர் : 16 வயது சிறுமி காணாமல் போன வழக்கை போக்சோ வழக்காக மாற்றம் செய்து சிறுமியை ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்றவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் அருகேயுள்ள பெருமாநல்லூரை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 29.04.2021 அன்று கடைக்குச் செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றவர் திரும்ப வரவில்லை .

சிறுமியை கண்டுபிடித்து தருமாறு 04.05.2021 அன்று பெருமாநல்லூர் காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். புகாரை பெற்றுக்கொண்ட பெருமாநல்லூர் போலீசார் சிறுமி காணாமல் போன வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்த நிலையில், சிறுமி திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று சிறுமியை அழைத்து வந்த போலீசார், சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சிறுமியை தேனி சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது 28) என்பவர் சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி தேனிக்கு அழைத்துச்சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிய வந்தது .

தொடர்ந்து மணிகண்டனையும், சிறுமியையும் காவல்நிலையம் அழைத்துவந்த போலீசார், வழக்கை போக்சோ வழக்காக மாற்றம் செய்து மேற்படி மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர் .

Views: - 448

0

0