16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்த கொடுமை : தாய், 2வது கணவர் உட்பட மூன்று பேர் கைது… ஈரோட்டில் நடந்த பயங்கரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 June 2022, 9:13 pm
Erode Arrest - Updatenews360
Quick Share

ஈரோடு : மைனர் பெண்ணின் கருமுட்டையை விற்பனை செய்த விவகாரத்தில் தாய் உள்பட 3 பேரை சூரம்பட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியை பிரபல கருத்தரிப்பு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று கருமுட்டைய பணத்திற்காக விற்பனை செய்வதாக சூரம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் பணத்திற்காக கரு முட்டைகளை விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்த போலீசார், தரகராக செயல்பட்ட மாலதி, மற்றும் சிறுமியின் தாய் சுமையா மற்றும் சுமையாவின் இரண்டாவது கணவர் சையத்அலி ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் கடந்த 4 ஆண்டுகளாக இவர்கள் கருமுட்டை விற்பனையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. மேலும் சம்பந்தப்பட்ட சிறுமி பருவமடைந்தது முதல் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று கருமுட்டையை ஒவ்வொரு முறையும் 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.

இதுவரை 15 முதல் 20 முறைவரை கருமுட்டை விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தின் போது சிறுமிக்கு, 20 வயது என போலியான ஆதார் அட்டை தயாரித்து ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள சூரம்பட்டி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 867

0

0