கிரந்தம் எழுத்துக்களுடன் கூடிய 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு: திருப்பரங்குன்றத்தில் கண்டெடுப்பு!!

Author: Aarthi Sivakumar
9 September 2021, 8:54 am
Quick Share

மதுரை: திருப்பரங்குன்றம் அருகே கி.பி 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரந்தம் எழுத்துகளுடன் கூடிய கல்வெட்டு மற்றும் சிற்பம் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் கருவேலம்பட்டி பகுதியில் சூரிய பிரகாஷ் கொடுத்த தகவலின்படி மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவி பேராசிரியரும் பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர் து.முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர்கள் லெட்சுமண மூர்த்தி, அஸ்வத்தாமன், சுப்பிரமணியன், ராமகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழு மேற்பரப்பை கள ஆய்வு செய்தனர்.

அப்போது தனியார் விவசாய நிலத்தில் கிரந்தம் கல்வெட்டும், படைப்பு சிற்பமும் கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டை படியெடுத்து ஆய்வு செய்தபோது கி.பி. 16ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என தெரியவந்தது.

Views: - 351

0

0