பாசன வசதிக்காக திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவு

15 September 2020, 5:16 pm
thirumoorthi dam - updatenews360
Quick Share

சென்னை : பாசன வாசதிக்காக வரும் 16ம் தேதி முதல் திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருப்பூர்‌ மாவட்டம்‌, திருமூர்த்தி அணையிலிருந்து பூசாரிநாயக்கன்‌ ஏரிப்‌ பாசன பகுதிகளுக்கு தண்ணீர்‌ திறந்துவிட கோரி, உடுமலைப்பேட்டை வட்டம்‌, ஆலாம்பாளையம்‌ கிராமம்‌ பூசாரிநாயக்கன்‌ ஏரிப்‌ பாசன விவசாயிகள்‌ உள்ளிட்ட
வேளாண்‌ பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள்‌ வந்துள்ளன.

வேளாண்‌ பெருங்குடி மக்களின்‌ வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர்‌ மாவட்டம்‌, உடுமலைப்பேட்டை வட்டம்‌, ஆலாம்பாளையம்‌ கிராமம்‌, பூசாரிநாயக்கன்‌ ஏரிப்‌பாசனத்திற்கு திருமூர்த்தி அணையிலிருந்து 39.87 மி.கன அடிக்கு மிகாமல்‌ வரும் 16ம் தேதி முதல்‌ தண்ணீர்‌ திறந்துவிட நான்‌ ஆணையிட்டுள்ளேன்‌.

இதனால்‌ திருப்பூர்‌ மாவட்டம்‌, உடுமலைப்பேட்டை வட்டத்தில்‌ உள்ள 88.56 ஏக்கர்‌ நிலங்கள்‌ பாசன வசதி பெறும்‌ என்பதை மகிழ்ச்சியுடன்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌. விவசாயப்‌ பெருமக்கள்‌ நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர்‌ மேலாண்மை மேற்கொண்டு உயர்‌ மகசூல்‌ பெற வேண்டுமாய்‌ அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌, எனக் குறிப்பிட்டுள்ளார்.