ரயில் பயணியிடம் இருந்து 17 கிலோ வெள்ளி, ரூ.4.25 லட்சம் ரொக்கம் பறிமுதல் : போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
4 August 2021, 2:47 pm
amount Seized 1- Updatenews360
Quick Share

வேலூர் : காட்பாடி ரயில்வே போலீசார் ரயிலில் சந்தேகத்திற்கிடமான நபரிடம் சோதனை செய்து 17 கிலோ வெள்ளி ரூ.4.25 லட்சம் ரொக்கப்பணம் இருப்பதை கண்டு அந்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் காட்பாடி ரயில்வே காவல்துறையினர் புருளியா எக்ஸ்பிரஸ் ரயில் விழுப்புரம் நோக்கி காட்பாடி வழியாக சென்ற போது வாலாஜா ரயில்வே சந்திப்பில் ரயில் வந்து கொண்டிருந்த போது போலீசார் ரயிலை சோதனை செய்தனர்.

சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரின் பையை சோதனை செய்ததில் 17 கிலோ வெள்ளி கட்டிகள் ரூ.4.25 லட்சம் ரொக்கம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் ரயிலில் எந்தவித ஆவணங்களுமின்றி இவைகளை கொண்டு சென்றதும் இவரை காட்பாடி ரயில்வே போலீசார் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் சேலம் செவ்வாய் பேட்டையை சேர்ந்த ரவி (வயது 40) என்பதும் இவர் கொண்டு சென்ற வெள்ளி பொருட்களுக்கும் பணத்திற்கும் எவ்விதமான ஆவணமுமில்லாததால் ரயில்வே போலீசார் இவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இவர் ஹவாலா கும்பலை சேர்ந்தவரா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் ரயில் மூலம் இதே போன்று சேலத்தை சேர்ந்தவர்கள் கடத்தி சென்ற 150 கிலோ வெள்ளியும் 30 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று இதே போன்று ரயிலில் 17 கிலோ வெள்ளிக்கட்டிகளும் ரூ.4. 25 லட்சம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது ரயில்வே போலீசாருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதேபோல் நடக்கிறது என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 554

0

0