17 வயது சிறுமிக்கு டும்டும்டும்… திருமணத்திற்கு பிறகு கடத்திச் சென்ற காதலன் : அரியலூரில் நடந்த கல்யாணக் கூத்து..!!

Author: Babu Lakshmanan
28 August 2021, 8:33 am
minor marriage - updatenews360
Quick Share

17 வயது சிறுமியை திருமணம் செய்தவரையும் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தவரையும் போலீசார் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருக்கு, அவரது பெற்றோர் திருச்சி மாவட்டம் மேலஅரசூர் கிராமத்தை சேர்ந்த மதியழகன் என்பவரின் மகன் மணிகண்டன் (22) என்பவருக்கு 14 வயதில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இந்நிலையில் மணிகண்டன் கோயம்புத்தூரில் வேலை பார்த்து வருவதால். சிறுமியின் முன்னாள் காதலனான நாகப்பட்டினம் மாவட்டம் கொட்டாரக்குடி கிராமத்தை சேர்ந்த ராமன் என்பவரின் மகன் வெற்றிச்செல்வன் சம்பவத்தன்று சிறுமியை கடத்தி சென்றுள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் தாய் மாரியம்மாள் எனது மகள் காணவில்லை கண்டுபிடித்து தாருங்கள் என ஒரு மனு ஒன்று கொடுத்தார் இதனின் அடிப்படையில் கீழப்பலூர் காவல்துறை ஆய்வாளர் சகாயம் அன்பரசு தலைமையிலான போலீசார் சிறுமியை தேடி வந்தனர். அப்போது சிறுமிக்கு 14 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் திருமணம் செய்த மணிகண்டனிடம் விசாரணை செய்தனர். மேலும் சிறுமியின் காதலனான வெற்றிச்செல்வன் என்பவரையும் கைது செய்து விசாரித்தனர்.

பின்னர், மைனர் பெண்ணை திருமணம் செய்த மணிகண்டன் என்பரையும், திருமணமான மைனர் பெண்ணை கடத்திச் சென்றதாக வெற்றிச்செல்வனையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சிறுமியை காப்பகத்தில் சேர்த்தனர். மேலும், இந்த திருமணத்திற்கு துணையாக இருந்த சிறுமியின் தாய் மாரியம்மாள் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர் போலீஸார்.

Views: - 350

0

0