சென்னையில் மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா பலி…! 12 மணி நேரத்தில் 18 பேர் உயிரிழப்பு

5 August 2020, 12:27 pm
Corona Test - Upatenews360
Quick Share

சென்னை: கொரோனா தொற்றால் சென்னையில் மட்டும் கடந்த 12 மணி நேரத்தில் 18 பேர் பலியாகி உள்ளனர்.

நாடு முழுவதும் பரவிய கொரோனா தமிழகத்தை உலுக்கி வருகிறது. மகாராஷ்டிராவில் உச்சக்கட்ட கொரோனா பாதிப்புகள் இருக்க, தமிழகத்திலும் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கொரோனா மையமாக இருந்த தலைநகர் சென்னையில் இப்போது பாதிப்புகள் சற்றே குறைந்திருப்பதாக கூறப்பட்டாலும் பலி எண்ணிக்கை வேகம் எடுத்துள்ளது அதிர்ச்சியை தந்திருக்கிறது.

நேற்றிரவு முதல் இன்று காலை வரை 12 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 18 பேர் பலியாகி இருக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 3 பேர் கொரோனா பாதிப்பால் சேர்க்கப்பட்டு இருந்தனர். சிகிச்சை பலனின்றி அவர்கள் 3 பேரும் இறந்துள்ளனர்.

இதேபோன்று ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் 8 பேர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் மரணமும் கொரோனாவால் நிகழ்ந்திருக்கிறது. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 2 பேர் கொரோனா தாக்கத்தால் பலியாகி உள்ளனர்.

ஒட்டுமொத்தமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொரோனா நோயாளிகளில் 16 பேர் உயிரிழந்து உள்ளனர். மற்ற 2 மரணங்களும் தனியார் மருத்துவமனைகளில் நிகழ்ந்துள்ளன. தொடரும் கொரோனா உயிர்பலிகள் சென்னையில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Views: - 7

0

0