40 வயது காதலனுடன் 19 வயது இளம்பெண் ஓட்டம்… திருமணக் கோலத்தில் காவல்நிலையத்தில் தஞ்சம்.. கண்ணீருடன் திரும்பிய பெற்றோர்..!

Author: Babu Lakshmanan
14 December 2022, 6:07 pm
Quick Share

40 வயது காதலனுடன் 19 வயது காதலி வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டு கீரமங்கலம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் மாவட்டம் கீரமங்கலம் மேலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சசிக்குமார்(40). இவர் திருப்பூர் மாவட்டம் அவினாசிப் பாளையம் பகுதியில் பணிபுரிந்து வந்துள்ளார்.

அப்போது, அவினாசிப் பாளையம் பகுதியைச் சேர்ந்த கோமதி (19) என்ற இளம்பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதலுக்கு பெண்ணின் வீட்டார் எதிர்ப்புத் தெரிவிக்கவே, வீட்டை விட்டு வெளியேறிய கோமதி, சசிக்குமாருடன் அவினாசிப் பாளையத்தில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் உள்ள சசிக்குமார் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனையடுத்து, கோமதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோமதியைத் தேடி கீரமங்கலம் வரவே, அவர்களால் தங்களுக்கு ஆபத்து ஏற்படுமோ என்று பயந்த காதல் ஜோடி, கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு, திருமணக் கோலத்தில் கீரமங்கலம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இதனையடுத்து, பெண்ணின் பெற்றோரை காவல் நிலையம் அழைத்த போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் திருமணம் செய்து கொண்ட சசிக்குமாருடன் செல்ல விரும்புவதாக கோமதி கூறியதை அடுத்து, போலீசார் சசிக்குமாருடன் கோமதியை அனுப்பி வைத்தனர்.

40 வயது நபருடன் 19 வயது இளம்பெண் திருமணம் செய்து கொண்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் கீரமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 368

0

0