உணவு டெலிவரி செய்யும் நபர் மீது தாக்குதல் : அடித்து சாலையின் ஓரம் போட்டுவிட்டுச் சென்ற சம்பவம் : மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட நபர்கள்..

Author: Babu Lakshmanan
28 January 2023, 8:37 am
Quick Share

வேலூர் : உணவு டெலிவரி செய்யும் இளைஞர் மீது மது போதையில் இருவர் தாக்குதல் நடத்யி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூரை சேர்ந்த பழனி-சரஸ்வதி தம்பதியினரின் இளைய மகன் திருமலை வாசன் (22). இவர் டிப்லோமோ மெக்கானிக்கல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலூர் மாநகர் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் (சோமோட்டோ) உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் (ஜன.,26) இரவு காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் செல்லும் பகுதியில் உள்ள வெல்லக்கல்மேடு பகுதிக்கு உணவு டெலிவரி செய்துவிட்டு திரும்பும் போது, அதே பகுதியை சேர்ந்த பார்திபன், தணிகாச்சலம் ஆகிய இருவர் சரமாரிமாக தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில், அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ICU ல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக இளைஞரை தாக்கிய பார்திபன் என்பவரை பிடித்து காட்பாடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளைஞர் திருமலைவாசனின் இருசக்கர வாகனம் மீது பார்திபன், தணிகாச்சலம் வந்த இருசக்கர வாகனம் மோதியதால், அதனை தட்டிக்கேட்டதால் இளைஞர் திருமலையை மது போதையில் இருந்த இருவர் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட இளைஞரின் உறவினர்கள் கூறுகையில், குடும்ப சூழல் காரணமாக திருமலை வாசன் கடந்த ஒரு மாதமாக உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருவதாகவும். நேற்று இரவு 2 பேர் சரமாரியாக தாக்கியுள்ளானர். ஆனால் எங்களுக்கு, லேசான காயம் ஏற்பட்டிருப்பதாக தான் தகவல் வந்தது. நேரில் சென்று பார்த்தால் பேச்சு மூச்சு இல்லாமல் உள்ளார். தயவு அவருக்கு சிகிச்சை அளிக்க அரசு உதவ வேண்டும். மேலும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என கேட்டுக்கொண்டனர்.

Views: - 419

0

0