ரேஷன்கடையில் 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி இலவசம் : முதலமைச்சர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan26 October 2021, 1:03 pm
புதுச்சேரி : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2 கிலோ சர்க்கரை மற்றும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி கூட்டுறவு பால் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் குறைந்த பட்ச ஊதியத்தை 10 ஆயிரம் ரூபாய் ஆக உயர்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர், அதன்படி தொகுப்பு ஊதியம் 7000 பெறும் தற்காலிக பணியாளர்களுக்கு ஊதியம் 15000ஆக உயர்தி வழங்கப்படும் என அறிவித்தார்.
மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2 கிலோ சர்க்கரை மற்றும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்றும் மேலும் ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கப்படும் இலவச, வேட்டி சேலைக்கு பதிலாக ரூ.500 ஜ பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
மேலும் புதுச்சேரியில் காலியாக உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பணியிடங்கள் மற்றும் காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
0
0