சரக்கு வாகனம் மோதியதில் 2 பேர் பலி : பைக்கில் 3 பேர் சென்றதால் விபத்து!!

10 May 2021, 9:39 am
Tirupur Accident- Updatenews360
Quick Share

திருப்பூர் : அடையாளம் தெரியாத சரக்கு வாகனம் மோதியதில் பிரிண்டிங் நிறுவனத்தில் பணிபுரியும் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருப்பூர் பாரப்பாளையம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி (வயது 28) என்பவர் அதே பகுதியில் உள்ள தனியார் துணி பிரிண்டிங் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

ஊத்துக்குளி அடுத்த வெள்ளியம்பாளையத்தில் உள்ள இவரது சகோதரியின் மகனுக்கு பிறந்த நாள் என்பதால் அதனை கொண்டாட உடன் பணியாற்றும் அ‌ஜய் (வயது 23), ராஜேஷ் (வயது 27) என்ற இரண்டு பேருடன் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

இரவு மீண்டும் திரும்பி செல்லும் போது சர்கார் பெரியபாளையம் அருகே அடையாளம் தெரியாத சரக்கு (ஈச்சர்) வாகனம் திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி நோக்கி அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் பலமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் கருப்பசாமி, அஜய் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ராஜேஷ் படுகாயங்களுடன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஊத்துக்குளி போலீசார் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற சரக்கு வாகனம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Views: - 137

0

1