குழந்தை விரும்பி உண்ணும் பஞ்சுமிட்டாயில் கஞ்சா : 2 வடமாநில இளைஞர்கள் கைது…20 கிலோ கஞ்சா பறிமுதல்!!

4 July 2021, 6:31 pm
Cannabis Arrest - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : பஞ்சு மிட்டாய் வியாபாரம் செய்வது போல் கஞ்சா வியாபாரம் செய்த வடமாநிலத்தவர் உட்பட மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி முருகன் குன்றம் அருகே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கஞ்சா தொடர்பாக இரட்டைக்கொலை அரங்கேறியது .இதனையடுத்து மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்வோர் மீது குண்டாஸ் சட்டம் பாயும் என எஸ்.பி பத்ரிநாராயணன் எச்சரித்தார் .

இதனையடுத்து கன்னியாகுமரியில் கடந்த ஒரு வாரத்தில் ஓரிரு சிறிய கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று மெகா கஞ்சா வியாபார கும்பல் சிக்கியது.

இதில் டெல்லி ஆக்ராவை சேர்ந்தவர் ஸ்ரீ கிருஷ்ணா (வயது 39). இவர் தூத்துக்குடியில் திருமணம் முடித்து தனது மனைவியுடன் வசித்து வருகிறார் .இவர் கடந்த ஓராண்டாக கன்னியாகுமரி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கிவந்துள்ளார்.

கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பஞ்சுமிட்டாய் வியாபாரம் செய்வது போல் சென்று கஞ்சாவை விற்பனை செய்து வந்துள்ளார். இவர் கஞ்சா வியாபாரம் செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அவர் தங்கியிருந்த வடக்கு குண்டல் பகுதிக்கு கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் தலைமையில் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர் விற்பனைக்காக 20 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

பின்னர் ஸ்ரீ கிருஷ்ணா மற்றும் அவருடன் வியாபாரத்தில் ஈடுபட்ட கொட்டாரத்தை சேர்ந்த சாமி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒற்றையால்விளை பகுதியை சேர்ந்த ஜஸ்டின் என்பவர் தப்பி ஓடினார்.

Views: - 393

0

0