பெயிண்ட் அடிக்கும்போது ஏற்பட்ட மயக்கம்? தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிருக்கு போராடிய பெயிண்டர்கள்…
Author: Prasad13 August 2025, 4:54 pm
திண்டுக்கல் நாராயண பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தனது வீட்டில் அமைந்துள்ள 10 அடி ஆழமுள்ள கீழ்நிலை தண்ணீர் தொட்டியை பெயிண்ட் அடிக்க தினேஷ் குமார் (27), நாகமுனி (29) ஆகிய இருவரையும் பணிக்கு அமர்த்தியுள்ளார்.
இந்த நிலையில் பெயிண்ட் அடித்துக்கொண்டிருந்த இருவரும் திடீரென மயக்கம் போட்டு தண்ணீர் தொட்டிக்குள்ளேயே விழுந்துள்ளனர். தண்ணீர் தொட்டிக்குள்ளே இருவரும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இத்தகவலை அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று தண்ணீரை வெளியே பீய்ச்சி அடித்து இருவரையும் மீட்டனர்.

மயக்கமடைந்த நிலையிலேயே இருவரையும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பெயிண்ட் அடித்துக்கொண்டிருந்த இருவர் மயக்கம் போட்டு விழுந்தது குறித்து நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
