சானிட்டரி நாப்கினில் தங்கம் கடத்திய 2 பெண்கள்: 1.2 கிலோ தங்கம் பறிமுதல்…!!

13 November 2020, 3:50 pm
gold-paste-updatenews360
Quick Share

கோவை: சார்ஜாவில் இருந்து ரூ.62 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சானிட்டரி நாப்கினில் மறைத்து எடுத்து வந்த 2 பெண்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர்அரேபியா விமானத்தில் வந்த பயணிகளை கலால் துறை அதிகாரிகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமான 2 பெண் பயணிகளை சோதனையிட்ட போது, தங்கத்தை பேஸ்ட் வடிவில் மாற்றி சானிட்டரி பேடில் வைத்து கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அவர்கள் இருவரும் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மாற்றி உள்ளாடையில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து 62 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய 1.2 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து, அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் சார்ஜாவில் இருந்து தங்கத்தை கடத்தி வந்தவர்கள் சென்னையை சேர்ந்த தெய்வானை மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த வசந்தி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Views: - 21

0

0