கனமழையால் மேற்கூரை இடிந்து 2 வயது குழந்தை பலி : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் ஆறுதல்!!

16 May 2021, 5:41 pm
Minister Anitha Rahdkrishnan- Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : சூறைகாற்றில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த நிலையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இறந்த குழந்தையின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ரூ.4 லட்சம் நிதி வழங்கினார்.

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் டவ்- தே புயல் ஏற்பட்டுள்ள நிலையில் குமரி மாவட்டத்தில் கடந்த 5 தினங்களாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்தும் வீடுகள் சேதமடைந்தும் காணப்பட்டன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் குமரி மாவட்டம் ராமன் துறை மீனவ கிராமத்தில் ஏற்பட்ட சூறாவளி காற்றில் கடற்கரை பகுதியில் அமைந்திருந்த டயானா பெக்மீர் என்பவரது வீட்டின் மேற்கூரை நள்ளிரவு வேளையில் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

இதில் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்த டயானா பெக்மீர் மற்றும் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் மீது கற்கள் விழுந்துள்ளது. இதில் அவரது 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இந்த நிலையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சூறைக்காற்றில் சிக்கி உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி அவர்களிடம் பேரிடர் நிவாரண நிதித்தொகை ருபாய் 4 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

அப்போது பேசிய மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்று புயல் காரணமாக கரை திரும்ப முடியாமல் கடலில் சிக்கி தவிக்கும் படகுகளை மீட்க தமிழக கடலோர காவல்படை யினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

Views: - 137

0

0