மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடம் : 20 நபர்களுக்கு பணிநியமன ஆணையை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்..!!

15 July 2021, 8:50 pm
stalin - updatenews360
Quick Share

சென்னை : மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடத்திற்குத்‌ தேர்வு செய்யப்பட்ட 20 நபர்களுக்குப்‌ பணிநியமன ஆணைகளை வழங்கிடும்‌ அடையாளமாக 4 நபர்களுக்கு முதல்வர்‌ மு.க.ஸ்டாலின்‌ இன்று தலைமைச்‌ செயலகத்தில்‌ பணிநியமன ஆணைகளை வழங்கினார்‌.

மேலும்‌, பள்ளிக்கல்வித்‌ துறையில்‌ பணியாற்றும்போது உயிர்நீத்த பணியாளர்களின்‌ வாரிசுதாரர்களுக்குக்‌ கருணை அடிப்படையில்‌ பணிநியமன ஆணைகளை வழங்கிடும்‌ விதமாக, 250 பணியாளர்களின்‌ வாரிசுதாரர்களுக்குப்‌ பள்ளிக்கல்வித்‌ துறை அலுவலகங்கள்‌ மற்றும்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ பணியாற்றிட இளநிலை உதவியாளர்‌ பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகளையும்‌, பொது நூலகத்‌ துறையில்‌ பணியாற்றிட 10 பணியாளர்களின்‌ வாரிசுதாரர்களுக்கு நூலகர்‌ பணியிடத்திற்கும்‌, ஒரு பணியாளரின்‌ வாரிசுதாரருக்கு இளநிலை உதவியாளர்‌ பணியிடத்திற்கும்‌, என மொத்தம்‌ 261 பணியாளர்களின்‌ வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில்‌ பணிநியமன ஆணைகளை வழங்கிடும்‌ அடையாளமாக முதல்வர்‌, 6 வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர்‌ மற்றும்‌ நூலகர்‌ பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார்‌.

இந்த நிகழ்ச்சியில்‌, பள்ளிக்கல்வித்‌ துறை அமைச்சர்‌ அன்பில்‌ மகேஷ்‌ பொய்யாமொழி, தலைமைச்‌ செயலாளர்‌ முனைவர்‌ வெ.இறையன்பு, இ.ஆ.ப., பள்ளிக்கல்வித்‌ துறை முதன்மைச்‌ செயலாளர்‌ காகர்லா உஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Views: - 93

0

0