2023ல் முதன்முறையாக தங்கம் விலை அதிரடி சரிவு… நகை வாங்க இதுதான் சரியான வாய்ப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
3 February 2023, 9:52 am
GOld - Updatenews360
Quick Share

பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும்போது, தங்கத்தின் விலை உயருகிறது. அதற்கு காரணம், பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள், அதை மாற்றி தங்கத்தில் முதலீடு செய்வதுதான்.
உதாரணமாக கடந்த ஆண்டு ரஷியா – உக்ரைன் போர் நடந்தபோது, பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது.

அதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலித்தது. அதாவது தங்கத்தின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்தது. ஒரு பவுன் (8 கிராம்) தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை கடந்து, இல்லத்தரசிகளை அதிர வைத்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. கடந்த மாதம் (ஜனவரி) 1-ந்தேதி, ரூ.41 ஆயிரத்தை கடந்த ஒரு பவுன் தங்கம் விலை, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.

ரூ.42 ஆயிரம், ரூ.43 ஆயிரம் என்று புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை (ஒரு பவுன்) உயர்ந்தது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில், தங்கத்திற்கான இறக்குமதி வரியில் மாற்றம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியதால், கடந்த மாதம் 29, 30-ந்தேதிகளில் தங்கம் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதற்கு அடுத்த நாள் (31-ந் தேதி) தங்கம் விலை சற்று குறைந்தது.

இந்த சாதனை நேற்று முறியடிக்கப்பட்டு, தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. ஒரு பவுன் தங்கம் ரூ.44 ஆயிரத்தை தாண்டியது. அதாவது பவுன் ரூ.44 ஆயிரத்து 40-க்கும், ஒரு கிராம் ரூ.5,505-க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலையும் ஒரு கிராம் ரூ.77.80 ஆக உயர்ந்து புதிய உச்சம் தொட்டது.

இந்த நிலையல் இன்று சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு 520 ரூபாய் குறைந்து 43, 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.5,440க்கு விற்பனையானது. வெள்ளி விலை ரூ.1400 குறைந்து ரூ.76,400க்கு விற்பனையாகிறது.

Views: - 172

0

0