காரில் கடத்தி வரப்பட்ட 288 மதுபாட்டில்கள் பறிமுதல்…! பார் உரிமையாளர் கைது

Author: kavin kumar
16 February 2022, 9:11 pm
Quick Share

விருதுநகர் : விருதுநகரில் காரில் கடத்தி வரப்பட்ட 288 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்- சிவகாசி சாலையில் குமாரலிங்கபுரம் பேருந்து நிறுத்ததில் இன்று மாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது விருதுநகர் பாண்டி நகர் பகுதியைச் சார்ந்த முரளி கிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், அந்த காரில் கடத்தி வரப்பட்ட 288 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், விருதுநகர் யானைகளை தெருவில் அரசு டாஸ்மார்க் கடை ஒன்றில் பார் எடுத்து நடத்தி வருவதும் தெரியவந்தது.

நாளை முதல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக டாஸ்மார்க் கடைகள் 3 நாட்கள் மூடப்பட உள்ள நிலையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கு மதுபாட்டில்கள் கொண்டு செல்லப்பட்தா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கார் ஓட்டி வந்த முரளி கிருஷ்ணன் என்பவரை கைது செய்து ஆமத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 996

0

0