பொங்கலுக்கு பொங்க வைக்க வரும் 2ஜி வழக்கு : ஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிராக விசாரணை துவக்கம்!!

2 December 2020, 10:43 am
2G case - Updatenews360
Quick Share

திமுகவின் இமாலய ஊழல் வழக்கான 2ஜி வழக்கில் விடுதலையான அ.ராசா மற்றும் கனிமொழிக்கு எதிரான வழக்கு விசாரணை அடுத்த மாதம் நடைபெறும் என டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2ஜி ஊழல் வழக்கில் கைதான முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராசா மற்றும் திமுக எம்பி கனிமொழி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிபிஐ டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

மேலும் இந்த வழக்கை தினமும் விசாரிக்க வேண்டும் என சிபிஐ சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து வரும் ஜனவரி மாதம் 3 நாட்கள் விசரணை நடக்கும் என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வரும் ஜனவரி மாதம் 13 ஆம் தேதியில் இருந்து 15ஆம் தேதிக்குள் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெறும் என நீதியதி யோகேஷ் கண்ணா தெரிவித்துள்ளார். தேர்தல் வரும் சமயத்தில் திமுகவுக்கு இந்த வழக்கு பின்னடைவு ஏற்படும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Views: - 25

0

0