2ஜி ஊழல் வழக்கு : விரைவாக விசாரிக்க சிபிஐ கோரிக்கை!!
16 August 2020, 7:21 pmடெல்லி : 2 ஜி ஊழல் மேல்முறையீட்டு வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஆ.ராஜா உள்ளிட்டோர் மீதான 2ஜி ஊழல் வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2ஜி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்டோர் கடந்த 2017 ஆம் ஆண்டு டெல்லி சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்திருந்தது.
இது குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் தாக்க செய்த மனுவில், 2ஜி வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பிரஜேஷ் சேத்தி வரும் நவம்பர் 30ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் நிறுவனங்கள் செப்டம்பருக்குள் வாதங்களை முடிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும் நீதிபதி ஓய்வு பெறுவதற்கு முன், அந்த வழக்கில் விசாரணை முடிக்கப்படவில்லை என்றால், நீதிமன்றம் நேரம் வீணடிக்கப்பட்டதாக கருதப்படும் என்பதால் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சிபிஐ மனு குறித்து பேசிய நீதிபதி பம்பானி, 2ஜி வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பின் தலைமை நீதிபதியின் உத்தரவுக்கு பின் இந்த விவகாரம் குறித்து நீதிபதி முன்பு வரும் 17ஆம் தேதி வைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.