திமுகவின் 2ஜி இமாலய ஊழல் வழக்கில் பலர் சிக்க வாய்ப்பு : அமைச்சர் செல்லூர் ராஜு!!

18 October 2020, 2:14 pm
Sellur Raju - Updatenews360
Quick Share

மதுரை : 2ஜி ஊழல் வழக்கில் திமுக பிரபலங்கள் பலர் சிக்க உள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

அதிமுக கட்சியின் 49 ஆவது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மதுரை தவிட்டு சந்தை பகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜூ கொடி ஏற்றி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, திமுக கூட்டணி வைத்துக்கொண்டு தான் எங்களுக்கு ,எதிராக செயல்படுகிறது, பிரதமரின் நல்ல செயல்பாடுகளுடன், எங்களோட கூட்டணிக் கட்சி செயல்படுகிறது, அவர்களின் செயல்பாடு எங்களுக்கு பிடித்துள்ளது, அதன் காரணமாக அவருடன் தோழமை கொண்டிருக்கிறோம்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி மகன் மட்டும் தற்போது சிக்கியுள்ளார். இன்னும் பலர் சிக்க வேண்டியுள்ளது. திமுகவினர் இந்தி எதிர்ப்பது போன்ற நாடகமாடுகிறார்கள். அவர்கள் வைத்துள்ள பள்ளியில் ஹிந்தி பாடம் நடத்துகிறார்கள்.

2ஜி அலைக்கற்றை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது, பலர் சிக்க இருக்கிறார்கள், எங்களுக்கு என சுய செல்வாக்கு இருக்கிறது தோழமைக் கட்சி செல்வாக்கையும் பயன்படுத்திக் கொள்கிறோம்.

நீட் தேர்வில் கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் ஆணித்தரமாக அதிமுக அரசு இருக்கிறது, இதுவே திமுக அரசாக இருந்தால் நழுவி கொண்டு சென்றிருக்கும், மத்திய அரசுக்கு இணையான மாநில அரசின் பாடத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தேர்ச்சி விகிதம் பன்மடங்கு கூட இருக்கிறது வரும் ஆண்டுகளில், எங்களுக்கு போட்டி திமுக மட்டுமே கண்ணுக்கெட்டிய தூரம் வேறு எதிரிகள் இல்லை, நாங்கள் சொந்தக்காலில் நிற்க விரும்புகிறோம். அடுத்தவர்களை காலை நம்பி நிற்கவில்லை. திமுக கொள்ளையடிப்பதை கலையாக கொண்டுள்ளது. ஊழலுக்கு பெயர் பெற்ற கட்சி திமுக.

அதிமுக தொண்டர்களின் ஒவ்வொரு உயிரணுக்களிலும் சசிகலா இருப்பதாக கூறிய கேள்விக்கு, கருணாஸ் தான் கூறியிருக்கிறார் நாங்கள் கூறவில்லையே, என்றார்.