கோவாக்சின் தடுப்பூசியின் 2வது டோஸ் செலுத்தும் பணி: சென்னையில் சிறப்பு முகாம் தொடங்கியது..!!

23 June 2021, 11:41 am
Covaxin_UpdateNews360
Quick Share

சென்னை: சென்னையில் கோவாக்சின் தடுப்பூசியின் 2வது டோஸ் செலுத்திக்கொள்வதற்கான சிறப்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, சென்னையில் இதுநாள் வரை 17 லட்சத்து 58 ஆயிரத்து 187 முதல் தவணை தடுப்பூசியும், 6 லட்சத்து 4 ஆயிரத்து 804 2-வது தவணை தடுப்பூசியும் என மொத்தம் 23 லட்சத்து 62 ஆயிரத்து 991 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் தரவுகளை ஆய்வுசெய்ததில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2வது தவணை தடுப்பூசி செலுத்தவேண்டிய காலத்தை கடந்து சுமார் 89 ஆயிரத்து 500 பேர் இருப்பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக 2வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போதைய நிலவரப்படி சுமார் 59 ஆயிரம் பேர் 2வது தவணை தடுப்பூசி செலுத்தவேண்டிய காலத்தை கடந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர்.

இவர்களில் கோவேக்சின் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களுக்கு இன்றும், நாளையும் மாநகராட்சியின் அனைத்து தடுப்பூசி மையங்களிலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி முகாம்கள் குறித்த தகவல்களை http://covid19.chennaicorporation.gov.in/covid/vaccine-centers/ என்ற இணையதள இணைப்பின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 115

0

0