3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை : ஆட்சியர் அறிவிப்பால் அதிர்ந்த மதுப்பிரியர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 July 2022, 6:12 pm
Tamac Leave - Updatenews360
Quick Share

கொல்லிமலை வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்திற்கு கொல்லிமலை வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் அறிவித்துள்ளார்.
இதுபோன்று கொல்லிமலையில் ஆகஸ்ட் 1 முதல் 3-ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கொல்லிமலை செம்மேடு, சோளக்காடு, செங்கரையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் முன்கூட்டியே மதுபானங்களை வாங்க டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் போட்டா போட்டி போட்டு மதுபானங்களை வாங்கி செல்கின்றனர்.

Views: - 497

0

0