தமிழக சட்டசபைக்கு 3 நாட்கள் விடுமுறை: ஆக., 23ம் தேதி மீண்டும் கூடுகிறது..!!

Author: Aarthi Sivakumar
20 August 2021, 9:33 am
Quick Share

சென்னை: தமிழக சட்டசபை 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு வரும் 23ம் தேதி மீண்டும் கூடுகிறது.

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13ம் தேதி தொடங்கியது. முதல் நாள் பொது பட்ஜெட்டும் அதற்கு மறுநாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. 16ம் தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன்படி கடந்த 4 நாட்களாக விவாதம் நடைபெற்று வந்தது. பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் பற்றி ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தின் கடைசி நாளாகும்.

இந்நிலையில் இன்று மொகரம் பண்டிகையையொட்டி அரசு விடுமுறை தினம் என்பதால் சட்டசபை கூட்டம் கிடையாது. அதற்கு அடுத்த நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் சட்டசபை கூட்டம் நடைபெறாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை சட்டசபை கூட்டம் நடைபெறாது.

3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு 23ம் தேதி முதல் மீண்டும் கூடும் சட்டசபை கூட்டம் அடுத்த மாதம் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. முன்னதாக செப்டம்பர் 21ம் தேதி வரை சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 249

0

0