தவெக மாநாட்டு குப்பையை அள்ள ஒரு நாள் பத்தாது… டன் கணக்கில் குப்பை : தூய்மை பணியாளர்கள் வேதனை!

Author: Udayachandran RadhaKrishnan
22 August 2025, 11:52 am

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நேற்று மாலை மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள பாரபத்தி கிராமத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதற்காக முதல் நாள் இரவே தமிழகம் முழுவதும் இருந்து வந்த லட்சக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டில் குவிந்தனர்.

மாநாட்டில் கலந்து கொள்ளும் தொண்டர்களுக்கு தவெக உணவு தயார் செய்யப்படவில்லை அதற்கு பதிலாக ஸ்நாக்ஸ் பாக்கெட்டுகள் ஐந்து லட்சம் தண்ணீர் பாட்டில்கள் தயார் செய்யப்பட்டது.

அதேபோல் மாநாட்டை சுற்றியும் பல்வேறு தற்காலிக உணவு ஸ்னாக்ஸ் கடைகள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் 600 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கார் பார்க்கிங் மாநாடு நடைபெற்ற இடம் என எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் குப்பைகளாக காட்சியளிக்கிறது.

மேலும் மாநாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட 1000க்கும் மேற்பட்ட நாற்காலிகள் உடைக்கப்பட்டு மலை போல் குவிக்கப்பட்டுள்ளது. தடுப்பு வேலிகள் சாய்க்கப்பட்டு தண்ணீர் குழாய்கள் உடைக்கப்பட்டு மாநாட்டிற்கு நடைபெற்ற இடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலணிகள் அதேபோல் சாலை முழுவதும் காலணிகள் கிடக்கின்றன.

கடந்த முறை விஜய் மதுரை விமான நிலையத்திற்கு வந்தபோதும் அங்கும் தொண்டர்களின் காலணிகள் மதுரை விமான நிலையம் முழுவதும் கிடந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தினர் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஒரு தூய்மை பணியாளர்கள் குழு இந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முழுவதுமாக குப்பைகளை அகற்ற இரண்டு, மூன்று நாட்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!