மதுரையில் சுவர் இடிந்து 3 பேர் பலியான விவகாரம் : உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்!!

2 February 2021, 6:39 pm
Building Dead Protest - Updatenews360
Quick Share

மதுரை : பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்டிட வேலைப்பாடுகள் ஈடுபட்ட 3 பேர் உயிரிழந்தவர்களின் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே மேலவடம்போக்கி தெருவில் உள்ள வாசுதேவன் என்பவருக்கு சொந்தமான சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த இரண்டாடுக்கு கட்டிடத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது.

கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று கட்டிட இடிபாடுகளை எடுத்து சென்ட்ரிங் போடும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ராமர், சந்திரன், ஜெயராமன், அழகர், வாசன், முனியசாமி ஆகிய 6 பேர் இந்த கட்டிடத்தில் வேலை பார்த்து வந்தனர்.

திடீரென ஒரு பக்க கட்டிடம் இடிந்து விழுந்ததில் சந்திரன், ராமர், ஜெயராமன் ஆகிய 3 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலியாகியுள்ளனர். மீதி மூன்று பேர்சிறு சிறு காயங்களுடன் உயிர்தப்பினர்.

இந்த கட்டிட இடிபாடு குறித்து காவல்துறையில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த உடல்களை மீட்டு உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் உடற்கூறு ஆய்வு முடிந்து மூன்று பேரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது இந்த வழியில் செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்த 3 பேரின் உறவினர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் தலா 10 லட்சம் ரூபாய் அரசு நிதி வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Views: - 0

0

0