கோயம்பேடு மார்க்கெட்டில் 3 மாத பெண் குழந்தை கடத்தல் : கூலித்தொழிலாளி தம்பதியினர் கண்ணீர்!!

9 November 2020, 1:51 pm
child Kidnap - Updatenews360
Quick Share

சென்னை : கோயம்பேடு சந்தையில் கூலித் தொழிலாளி தம்பதியினரின் மூன்று மாத பெண் குழந்தை கடத்தப்பட்ட குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் மற்றும் சந்தியத தம்பதியினர் சென்னை கோயம்பேட்டில் உள்ள சந்தையில் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்கள் தங்கள் இரண்டு குழந்தைகளும் சந்தையில் தங்கள் கடை முன் இரவு நேரத்தில் படுத்து உறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் திடீரென் கண் விழித்து பார்த்த போது மூன்று மாத பெண் குழந்தையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதியினர் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல 4 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை வஉசி சாலையில் நடைபாதையில் படுத்திருந்த தம்பதியினரின் ஆண் குழந்தையை ஆடி காரில் வந்தவர்கள் கடத்திச் சென்றனர். இந்த வழக்கு குறித்து இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Views: - 23

0

0