பேருந்து நிலையத்தில் ‘திருதிரு’ வென முழித்த இளைஞரிடம் போலீசார் நடத்திய விசாரணை : அடுத்தடுத்து பொட்டலங்களுடன் சிக்கிய 3 பேர்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 July 2022, 3:34 pm

தமிழகத்தில் போதை வஸ்துகள் சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவது வாடிக்கையாகி வருகிறது. இதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து சட்டவிரோத போதை, கஞ்சாப் பொருட்களை பறிமுதல் செய்து கைது நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றனர்-

இந்த நிலையில் இன்று கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் போலீசார் முன்னிலையில் இளைஞர் ஒருவர் சந்தேகிக்கும்படியாக நின்று கொண்டிருந்தார்.

இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, கஞ்சா பாக்கெட்டுகள் வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில் அந்த நபர் திண்டுக்கல்லை சேர்ந்த இளைஞர் பிரவீன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 28 கிலோ கஞ்சா மற்றும் 3 லட்ச ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

பிரவீன் கொடுத்த தகவலின் அடிப்படையில் திண்டுக்கல்லில் இருந்த அவரது கூட்டாளிகள் தர்மராஜ் மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • sivakumar broke karthi and tamannaah love life தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!