மாயனூர் காவிரி ஆற்றில் மாணவி உட்பட 3 பேர் சிக்கி தவிப்பு : தீயணைப்பு துறையினரின் சாமர்த்தியத்தால் உயிருடன் மீட்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
16 July 2022, 7:45 pm

கரூர் : மாயனூர் காவிரி கதவணை அருகே காவிரி ஆற்றின் நடுவில் தண்ணீரில் மாற்றிக் கொண்ட கல்லூரி மாணவி, மாணவர்கள் என 3 பேரை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

கரூர் மாவட்டம் கடவூர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (வயது 21), வெள்ளியணைப் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 20),  வெள்ளியணை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி மகேஷ் (வயது 21) ஆகிய மூன்று பேரும் கரூர் மாவட்டம் தான்தோன்றி மலையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து உள்ளனர்.

இவர்கள் மூன்று பேரும் நண்பர்கள் இன்று இவர்கள் மாயனூர் செல்லாண்டியம்மன கோவிலில்  தரிசனம் செய்தனர். தொடர்ந்து அருகில் உள்ள காவிரி ஆற்று பகுதிக்கு சென்றனர்.

அப்பொழுது தண்ணீர் குறைவாக இருந்ததாக தெரிகிறது. அவர்கள் காவிரி ஆற்றின் நடுப்பகுதிகள் அமர்ந்து உணவருந்தி உள்ளனர். அப்போது தண்ணீர் படிப்படியாக அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதுகுறித்து கரூர் தீயணைப்பு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் விரைந்து வந்து காவிரி பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய மூன்று பேரையும்  1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கரை பகுதிக்கு கொண்டு வந்தனர். மேலும் இச்சம்பம் குறித்து மாயனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!