கோவையில் கல்லூரி மாணவி உட்பட 3 பெண்கள் மாயம் : போலீஸ் விசாரணை!!

By: Udayachandran
18 June 2021, 11:11 am
Missing - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் கல்லூரி மாணவி உள்பட 3 பெண்கள் திடீரென மாயமாகினர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோவை புலியகுளம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் வீராசாமி. இவரது மகள் பிரியா (வயது 20). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார் .

தற்போது ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று காலையில் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாயார் ஈஸ்வரி ராமநாதபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

இதேபோல அன்னூரை அடுத்த சொக்கம்பாளையத்தை சேர்ந்தவர் தேசிங்குராஜா. இவரது மனைவி செல்வராணி (வயது 23) இவர்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று கடைக்கு போவதாக வீட்டில் கூறிவிட்டு சென்று செல்வராணி மீண்டும் வீடு திரும்பவில்லை எங்கோ மாயமாகிவிட்டார். இவரது கணவர் தேசிங்குராஜா அன்னூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இதேபோல பொள்ளாச்சி கோமங்கலம்புதூரை அடுத்த கெடிமேடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 25). இவர் மாக்கினாம்பட்டி உள்ள தனியார் தொழிற்சாலையில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்.
இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது .ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் நேற்று வேலைக்கு சென்ற விஜயலட்சுமி வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது கணவர் செந்தில்குமார் கோமங்கலம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Views: - 185

0

0