கோவையில் 3 வயது குழந்தையை அடித்து சித்ரவதை : வளர்ப்பு தாய் தந்தையிடம் போலீசார் விசாரணை!!
30 January 2021, 3:45 pmகோவை : கரும்புக்கடை பகுதியில் 3 வயது குழந்தையை பெற்றோர் அடித்து துன்புறுத்துவதாக பொதுமக்கள் போலீசாரிடம் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை குனியமுத்தூர் அருகே கரும்புக்கடை பகுதியில் ஒரு வீட்டில் மூன்று வயது குழந்தையை அவர்களது பெற்றோர் அடித்து துன்புறுத்துவதாகவும் அதனால் காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் போத்தனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போத்தனூர் போலீசார் மற்றும் சைல்டு ஹெல்ப் லைன் அமைப்பினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து சம்பவம் நடந்ததாக கூறப்படும் வீட்டில் இருந்த நஜூம்நிஷா – அப்துல்லா ஆகியோரை பிடித்து போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது போலீஸ் விசாரணையில் குழந்தையை நஜூம்நிஷா – அப்துல்லா தம்பதியினர் தத்தெடுத்து வளர்த்து வருவது தெரியவந்தது. தொடர்ந்து வளர்ப்பு தாய் – தந்தை இருவரிடமும் போத்தனூர் போலீசாரும், சைல்டு லைன் அலுவலர்களும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடலில் காயங்களுடன் இருந்த குழந்தையை போலீசார் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
0
0