சிறுவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை : 3 இளைஞர்கள் கைது!!

22 November 2020, 4:41 pm
Ganga Arrest - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : சிறுவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்களை கைது செய்து 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராபர்ட் ஜெயின் நாகர்கோவில் இந்து கல்லூரி பகுதியில் ரோந்து சென்றார். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த நபர்களை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் அந்த பகுதியை சேர்ந்த உதயராஜ் (வயது 21) சதீஷ்(வயது 19) , மற்றும் விக்னேஷ்(வயது 19) என்பதும், அவர்களை சோதனை செய்த போது சிறு சிறு பொட்டலமாக 250 கிராம் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.

மேலும் அந்த பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. உடனே அவர்களை கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தார்.

Views: - 15

0

0