பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல்! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

24 September 2020, 12:16 pm
Perarivalan - updatenews360
Quick Share

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக புழல் சிறையில் இருந்து வருபவர் பேரறிவாளன். இவருக்கு உடல்நலக்குடிறைவு ஏறப்ட்டதால் 90 நாள் பரோல் வழங்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஆனால் புழல் சிறையில் ஏற்கனவே 50 கைதிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதனால் பல்வேறு உடல்நல கோளாறுகளால் பாதிக்கப்பட்டு அவதிப்படும் பேரறிவாளன், கொரோனாவால பாதிப்படைய வாய்ப்புள்ளது என்பதால் பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இது குறித்த விசாரணை செய்த உயர்நீதிமன்றம், தமிழக அரசு இது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டார். இந்நிலையில் கொரோனா காலத்தில் சிறையில் இருப்பதுதான் பாதுகாப்பானது என தமிழக அரசு பதிலளித்திருந்தது. இதே போல சிறைத்துறையும் அற்புதம்மாள் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. இந்தநிலையில் இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பேரறிவாளனுக்கு 30 நாள்கள் விடுப்பு வழங்கி உத்தரவிட்டனர். மேலும், நீதிமன்ற உத்தரவு கிடைக்கப்பெற்ற ஒரு வாரத்தில் பேரறிவாளனை பரோலில் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

Views: - 1

0

0