காமமோகத்தின் இழிவான உச்சம்.. 7 மாத பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!

Author: Hariharasudhan
5 December 2024, 7:44 pm

மேற்கு வங்கத்தில் சாலையோரம் வசிக்கும் தம்பதியின் 7 மாத குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்த 35 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொல்கத்தா: மேற்கு வங்கம் மாநிலம், கொல்கத்தாவின் ஒரு பகுதியில், கடந்த நவம்பர் 30ஆம் தேதி தங்குவதற்கு வீடு வசதி இல்லாமல், நடைபாதையில் தம்பதி தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களடு 7 மாத பெண் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு உள்ளது. இதனையடுத்து, அருகில் இருப்பவர்கள் உடனே சென்று குழந்தையை மீட்டுள்ளனர். பின்னர், இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இந்தத் தகவலின் பேரில் தகசம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பச்சிளம் பெண் குழந்தையை ஆர். ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, மருத்துவர்கள், சிறுமியின் உடலில் பல இடங்களில் கீறல்கள் உள்ளதாகவும், இது பாலியல் துன்புறுத்தலைக் குறிக்கிறது என்றும் கூறியுள்ளனர்.

7 month infant baby got sexual assault

இது அதிர்ச்சி அளிக்க, விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசார், இந்த விசாரணையில், இச்சம்பவம் குறித்து ஒருவர் புர்டோல்லா காவல் நிலையத்திற்கு போன் செய்து, தனது வீட்டிற்கு வெளியே உள்ள நடைபாதையில் ஒரு குழந்தை தனியாகப் படுத்துக் கொண்டு அழுது கொண்டிருப்பதாக கூறி உள்ளார்.

7 month infant baby got sexual assault in Kolkata

அதேநேரம், நடைபாதையில் வசிக்கும் இருவர் ஏழு மாத மகளைக் காணவில்லை என்று கூறியிருந்ததாக போலீஸூக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளில், ஷியாம் பஜார் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பணிபுரிந்து வரும் 35 வயது இளைஞர் குழந்தை தனியாக இருக்கும் நேரத்தில் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.

இதையும் படிங்க: பிரபல இயக்குனரின் வீட்டில் சூழ்ந்த சோகம்.. ஓடோடி வந்த திரையுலகம்!

இதனையடுத்து, அந்த நபரை போலீசார், ஜார்காம் மாவட்டத்தில் உள்ள கோபிபல்லவ்பூர் காவல் நிலையத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ