அரசுப் பள்ளி ஆசிரியர் பாலியல் தொல்லை.. மாணவி எடுத்த திடீர் முடிவு.. மதுரையில் அதிர்ச்சி!

Author: Hariharasudhan
5 December 2024, 6:19 pm

மதுரை, உசிலம்பட்டி அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், விக்கிரமங்கலம் பகுதியில் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவி ஒருவர், விடுதியில் தங்கி பயின்று வருகிறார். மேலும், இந்தப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மூர்த்தி என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில், இந்த மாணவியிடம் ஆசிரியர் மூர்த்தி தான் சொல்வதற்கு இணங்க வேண்டும் எனக் கூறி பாலியல் தொல்லை அளித்ததாகவும், தன்னை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்ததாகவும் மாணவி தரப்பில், அவரது பெற்றோர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

Usilampatti school girl sexual harassment

மேலும் தன்னிடம் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசியதோடு, தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் மாணவியின் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனால் மாணவி, பள்ளியிலே தற்கொலைக்கு முயன்ற நிலையில் சக மாணவிகள் அவரைக் காப்பாற்றியதாகவும், இதனையடுத்து மாணவியின் உடன் இருந்த மற்ற மாணவிகள் அவரது தாயாரிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர்.

மேலும் இது குறித்து புகார் அளிக்கக்கூடாது என மிரட்டல்கள் வந்ததாகவும் பெற்றோர் தெரிவித்தனர். இந்த நிலையில், இது குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் சிவராம பாண்டியன், சம்பந்தப்பட்ட ஆசிரியர் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் கடந்த 24 ஆண்டுகளாக பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார் என உறுதிப்படுத்தினார்.

Usilampatti school girl sexual abuse

மேலும், கடந்த 2 நாட்களாக விடுமுறையில் இருந்ததாகவும், மாணவி விவகாரம் தற்போது தான் தனக்கு தெரிய வந்திருப்பதாகவும், அதேநேரம் மாணவி தன்னிடம் புகார் எதுவும் அளிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: குறையை மட்டுமே சொல்றாங்க.. எலும்பை உடைக்கணும் : அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு பேச்சு!

மேலும் இது சம்பந்தமாக பள்ளி மாணவிகளிடம் விசாரித்துள்ளதாகவும், தற்போது ஆசிரியரை பணி செய்ய வேண்டாம் எனக் கூறியுள்ளதாகவும் கூறினார். மேலும், இது தொடர்பாக மாவட்டக் கல்வி அதிகாரியிடம் தகவல் தெரிவித்து உள்ளதாகவும் கூறியுள்ளார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?