நடப்பு ஆண்டில் 4வது முறை : மேட்டூர் அணையால் விவசாயிகள் மகிழ்ச்சி!!

27 November 2020, 1:42 pm
Mettur Dam - Updatenews360
Quick Share

நீர்வரத்து அதிகரிப்பால் நடப்பு ஆண்டில் 4வது முறையாக மேட்டூர் அணை 100அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து அதிகளவிலான தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் நாள்தோறும் உயர்ந்த வண்ணம் இருந்தது. இதனால் கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் மட்டும் மேட்டூர் அணை மூன்று முறை நிரம்பியது.

இந்த நிலையில், நிவர் புயலால் டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்ததால் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்க திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் 100 அடியை எட்டியுள்ளது. நடப்பாண்டில் மட்டும் 3வது முறையாக நிரம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால், மேட்டூர் அணை 4வது முறையாக 100அடியை எட்டியுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரத்து 111 கனஅடியாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Views: - 27

0

0