தமிழகத்தில் 5 மாவட்டங்களில் ஆட்சியர்கள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

17 May 2021, 9:23 pm
TN Sec- Updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட 5 மாவட்ட ஆட்சியர்களை அதிரடியாக மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலர் இறையன்பு வெளியிட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ளதில் கூறப்பட்டுள்ளதாவது:-

  1. மாநில தொழில்கள் ஊக்குவிப்பு கழக நிர்வாக இயக்குனர் பதவி வகிக்கும் அனீஷ் சேகர் மாற்றப்பட்டு மதுரை ஆட்சியராக அன்பழகனுக்கு பதில் நியமிக்கப்பட்டுள்ளார்.
  2. சமூக நலம் மற்றும் சத்துணவு துறை இணைச் செயலர் கார்மேகம் மாற்றப்பட்டு சேலம் மாவட்ட ஆட்சியராக ராமனுக்கு பதில் நியமிக்கப்பட்டுள்ளார்.
  3. தமிழ்நாடு மாநில ஆணைய செயலர் பாலசுப்பிரமணியன் மாற்றப்பட்டு கடலூர் மாவட்ட ஆட்சியராக சேகர் சக்கமுரிக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  4. தொழில் மற்றும் வணிக வரித்துறை கூடுதல் ஆணையராக பதவி வகிக்கும் சிவராசு மாற்றப்பட்டு திருச்சி மாவட்ட ஆட்சியராக திவ்யதர்ஷினிக்கு பதில் நியமிக்கப்பட்டுள்ளார்.
  5. திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி மாற்றப்பட்டு தர்மபுரி மாவட்ட ஆட்சியராக கார்த்திகாவுக்கு பதில் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 118

0

0