துணி துவைக்க Washing Machine எடுத்த போது காத்திருந்த அதிர்ச்சி : படுத்துறங்கிய 5 அடி நீள பாம்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
31 August 2022, 1:29 pm
Washing Machine Snake - Updatenews360
Quick Share

சின்னாளபட்டியில் வாஷிங் மெஷினுக்குள் இருந்த 5 அடி நீளமுள்ள கொடிய விஷமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பு ஆத்தூர் தீயணைப்புத்துறையினர் லாவகமாக பிடித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அடுத்த கலைமகள் காலனி பகுதியில் மணிகண்டன் என்பவரது வீட்டிற்க்குள் பாம்பு ஒன்று இருப்பதாக ஆத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் புனித்ராஜ், வீரர்கள் அழகேசன், கார்த்திகேயன் , திருமூர்த்தி மற்றும் தங்கராஜ் ஆகியோர் கொண்ட மீட்பு படையினர் மணிகண்டன் வீட்டிற்கு வந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேடியதில் அவரது வீட்டில் இருந்த பழைய வாஷிங் மெஷினுக்குள் பாம்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து வாஷிங் மெஷினை அப்படியே வெளியில் தூக்கி வந்து தேடினர். இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் உள்ளே இருந்த பாம்பு தப்பியோட முயன்றது.
ஆனால், சாமர்த்தியமாக தீயணைப்பு வீரர்கள் அதனை பிடித்தனர். பிடிபட்ட பாம்பு கொடிய விஷமுள்ள ஐந்து அடி நீளம் கொண்ட கொம்பேறி மூக்கன் வகை பாம்பு என மீட்புபடையினர் தெரிவித்தனர்.

பின்னர் அந்த பாம்பினை சாக்கு பையில் போட்டு கட்டி அடர்ந்த வனப்பகுதிக்கு பாதுகாப்பாக கொண்டு சென்று விட்டனர்.

Views: - 302

1

1